சுவையான இட்லி போண்டா செய்வது எப்படி?





சுவையான இட்லி போண்டா செய்வது எப்படி?

0
பொதுவாகவே, மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு. குறிப்பாக, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது சாப்பிட கேட்பார்கள். 
சுவையான இட்லி போண்டா செய்வது எப்படி?
அப்படி அவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் கடலை மாவு இல்லை என்றால் தோசை மாவு இருக்கிறதா அப்படியானால் அதில் டேஸ்டான எளிதில் செய்யக்கூடிய போண்டா செய்து கொடுங்கள். 
பொதுவாக போண்டாக்களில் இனிப்பு போண்டா கார போண்டா மசாலா போண்டா என பல வகைகள் போண்டாக்களை நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், நீங்கள் கண்டிப்பாக இட்லி மாவில் செய்த போண்டாவை சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள்.

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது 15 நிமிடத்தில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புளித்த இட்லி மாவு உள்ளதா? அதை தூக்கி போடும் எண்ணத்தில் உள்ளீர்களா? 

அப்படியானால் முதலில் அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டு, புளித்த இட்லி மாவைக் கொண்டு போண்டாக்களை சுடுங்கள். இந்த இட்லி மாவு போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியவாறு இருக்கும். 

உங்களுக்கு இட்லி மாவு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி மாவு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 

அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?

தேவையான பொருள்கள் :

இட்லி – 5

கடலைமாவு – 4 மேஜைக் கரண்டி

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – சிறிதளவு

தண்ணீர் – 2 மேஜைக் கரண்டி

பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :
இட்லி போண்டா செய்வது
இட்லிகளை உதிர்த்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து 

அதனுடன் இரண்டு மேஜைக் கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டை களாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு செய்து வைத்த உருண்டைகளை போடவும். 

ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன?

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான இட்லி போண்டா ரெடி.

குறிப்பு :

மீந்து போன இட்லியிலும் இந்த முறையில் போண்டா செய்யலாம். ஐந்து இட்லிக்கு 20 போண்டாக்கள் வரை வரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)