சுவையான இத்தாலியன் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta





சுவையான இத்தாலியன் பாஸ்தா செய்வது எப்படி? #Pasta

0
உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாஸ்தா விரும்பி சாப்பிடப்படுகிறது. அதற்கு இதன் சுவையும், எளிமையான செய்முறையுமே காரணம். ஆனால் பாஸ்தா சாப்பிடுவதை சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள். 
சுவையான இத்தாலியன் பாஸ்தா செய்வது எப்படி?
இது மோசமான கார்போஹைடரேட் நிறைந்த உணவு என்பதால் பாஸ்தாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. உண்மையில் பாஸ்தா அவ்வளவு மோசமானதா என்ன? 

ஒருவேளை நாம் சமைக்கும் முறையில் ஏதாவது தவறு இருக்கிறதா? பாஸ்தா உணவிற்கு கார்போ ஹைடரேட்டோடு தொடர்பு இருப்பதால் பலரும் இதை சாப்பிட தயங்குகிறார்கள். 
ஆனால் சரிவிகித உணவில் பாஸ்தாவை சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என உலகமே ஒத்துக் கொண்டுள்ளது. பாஸ்தாவை அளவாக உட்கொண்டால், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாகவே எடுத்துக் கொள்வோம். 

இதனால் தேவையின்றி உடல் எடை அதிகரிப்பது ஒழுங்குப் படுத்தப்படும். பாஸ்தா உணவு ஆரோக்கியமற்றது என்று சொல்லப்பட்டு வரும் பொய்யை உடைக்க வேண்டிய நேரமிது.

பாஸ்தா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமான பாஸ்தா, மைதா மாவில் தயாரிக்கப் படுகிறது. 

இதில் கார்போ ஹைடரேட்டும் புரதமும் சேர்ந்தே இருக்கின்றன. எனினும் இன்று கடைகளில் முழு கோதுமை பாஸ்தா முதல் சுண்டல் பாஸ்தா வரை பல வகைகளில் கிடைக்கிறது. 
இதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது. சுவை மற்றும் வடிவத்தை வைத்தே ஒருவர் பாஸ்தாவை தேர்ந்தெடுத்த போதும், நம்முன் இவ்வுளவு வகையான பாஸ்தாக்கள் இருக்கும் போது நமக்கான பாஸ்தாவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !
தேவையானவை

பாஸ்தா - ஒரு கப்

பூண்டு - 2 பற்கள்

பேசில் தழை – 4

உப்பு – தேவைக்கு

வெங்காயம் - ஒன்று

சிகப்பு பழுத்த மிளகாய் - 3

ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி - தலா 2 சிட்டிகை

துருவிய மொசரேல்லா சீஸ் - 4 தேக்கரண்டி

தக்காளி - 200 கிராம்

மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - கால் தேக்கரண்டி

தேன் - கால் தேக்கரண்டி

செய்முறை :
இத்தாலியன் பாஸ்தா
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பிசுபிசுப்பு இல்லாமல் பதமாக வேக வைக்கவும். பின்பு வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்க விட்டு எடுத்து ஆற விடவும்.

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், கூழாக்கிய தக்காளி, தேன், மிளகுத் தூள், ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.
xத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும். பாஸ்தாவைப் பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாகப் பரிமாறவும்.
பின்னர் இந்தச் சாஸை ப்ரெட்டில் தடவி, அதன் மேல் காய்கறிகள், சீஸ் தூவி அவனில் 350 டிகிரியில் 5 நிமிடங்கள் வைத்து எடுத்த குட்டி ப்ரெட் பீட்ஸா . பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)