சூப்பரான கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது எப்படி? #Koottu





சூப்பரான கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது எப்படி? #Koottu

யானைக்கு மதம் பிடிக்கும். எப்போது பிடிக்கும். அதற்கு உளவியல் மற்றும் உடலியல் வகையில் எதேனும் அடக்குமுறை ஏற்படும் போது அதனால் வரும் அழுத்தம் மதம் பிடிக்க வைக்கிறது.
சூப்பரான கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது எப்படி?
அப்படி பிடிக்காமல் இருக்க அதற்கு அடிக்கடி வாழைத்தண்டு கொடுப்பார்கள்.
அதே போல் மனிதனுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும். 

உடலில் அதிகப்படியாக தேங்கும் கெட்ட கொழுப்பு குறைவதற்கு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். அது நம் வீட்டில் வளர்க்கும் கீரைத்தண்டாக இருப்பின் இன்னும் உசிதம். 
வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிகள் தாக்காமலும், அதிகப் படியான மகசூலுக்கும், விரைவில் முதிர்ச்சி அடைவதற்கும் சேர்க்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதால் யோசிக்க வேண்டி உள்ளது.

பொதுவாக கீரைத் தண்டை மட்டும் அடிக்கடி சாப்பிட, மலம் கட்டும் என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. எதற்கும், கீரையை யும் தண்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 

நல்லது. கீரையில் நிறைய வைட்டமின்கள், இரும்பு சத்து, மினரல்ஸ் இருக்கிறது. வாரத்தில் ஐந்து நாட்கள் கீரை சாப்பிடலாம். நார்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் வராது. சர்க்கரை க்குப் நல்லது. ஒரே கீரையை தினமும் சாப்பிடாமல், மாற்றி மாற்றி சாப்பிடவும்.
என்னென்ன தேவை?

கீரைத்தண்டு - ஒரு கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தயிர் - கால் கப்

பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க...

தேங்காய்த் துருவல் - கால் கப்

பச்சை மிளகாய் - ஒன்று

சீரகம் - அரை டீஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு தலா - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் என்ன?

எப்படி செய்வது?
கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது
ஒரு ஜாரில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு எடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், சேர்த்து தாளிக்கவும்.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள் !
இதில் தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் உப்பு, நறுக்கி வைத்த கீரைத்தண்டு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். வெந்த பின்பு அரைத்த விழுதை சேர்த்துக் கிளறி, அடுப்பி லிருந்து இறக்கும் முன் தயிர் விட்டு கலக்கி பரிமாறவும்.