கருவாட்டில் நிறைய நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இரும்புச் சத்துக்கள் உள்ளன. கருவாடுகளை சமைத்து சாப்பிடும் போது, வயிற்றிலுள்ள நச்சுக்கள், பூச்சிகள் நீங்கி விடும். இதனால், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்யவும், இந்த கருவாடுகள் உதவுகின்றன. வாத, பித்தத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடியது அனைத்து தன்மையும் கருவாடுகளுக்கு உண்டு.
அதனால் தான், மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடிய உணவு வகைகளில் பிரதான இடத்தை கருவாடுகள் வகிக்கின்றன.
கிராமப் புறங்களில் இன்று வரை, இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாக உள்ளது. கருவாட்டு சாறு வைத்து குடித்தால், தலையில் உள்ள நீர் முதல் சுவாசக் கோளாறு வரை நீங்கி விடும்.
உடல் நலம் குன்றியவர்கள், பலநாள் படுக்கையில் கிடந்தவர்களுக்கு, கருவாட்டு குழம்பு சாப்பிட தரும் போது, விரைந்து உடல் நலம் தேறுவார்கள்.
ருசியான கருவாடு என்றால், நெய்மீன் என்று சொல்லப்படும் சீலா மீன் கருவாடு தான் என்றாலும், அதிக சத்து நிறைந்த மீன் என்றால் அது மாசி கருவாடு தான். சூரை மீனை கருவாடாக்கினால், அது தான் மாசி கருவாடு.
தேவையான பொருட்கள்:
மாசித்தூள் – 3 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
பழுத்த தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
கடுகு,உளுந்து – தலா அரை டீஸ்பூன்
கருவேப்பிலை, மல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு
பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !
செய்முறை :
மாசி கருவாட்டு துண்டை அம்மியில் பொடித்துக் கொள்ளவும். வெங்காய த்தை நீளவாக்கில் மெல்லிய தாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் பச்சை மிளகாயும் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் கறிவேப்பிலை பச்சை மிளகாயா சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
நொறுக்குத் தீனி என்பதே ஆரோக்கியக் கேடு !
தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக் கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் இறக்கவும். சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட் டிஸ்.