பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன.
பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது.
மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.
இன்று பலருக்கும் இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை/நீரிழிவு தான். இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை தரும் ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
சமீபகாலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சுவையான செலரி தொக்கு செய்வது எப்படி?
என்னென்ன தேவை?
பப்பாளி - 1
கடலை பருப்பு - 3/4 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
தேங்காய் - 3/4 கப்
சீரக தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
முதலில் காயாக இருக்கும் பப்பாளி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாணலியில் கடலை பருப்பு எடுத்து தண்ணீர் விட்டு சமைக்கவும். பருப்பு வெந்த பின் பப்பாளி சேர்த்து நன்கு சமைக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு ஜாரில் தேங்காய், சீரக தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, பப்பாளி கலவை யுடன் கலந்து நன்றாக வேக விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பப்பாளி கூட்டில் ஊற்றவும். சுவையான பப்பாளி கூட்டு ரெடி!!