உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி?

0
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி?
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து. 
ஆனால் உருளைக்கிழங்கை உண்பதால் உடலில் பல கோளாறுகள் உண்டாகும் என இதற்கு முன்னர் பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வந்த நிலையில்.

உருளைக்கிழங்கு உண்பதால் உடலில் நேரடியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என என அமெரிக்காவில் உள்ள போஸ்டான் பல்கலைக் கழகத்தை சேர்த்த தி ஜார்ணல் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

மேலும் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் உருளைக் கிழங்குகளை உண்பதால் எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லை. அவற்றை எண்ணெயில் பொறித்தோ அல்லது அவித்தோ கூட நீங்கள் உண்ணலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 1

பெரிய வெங்காயம் – 1

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 1/2 கப்

உப்பு – சுவைக்கு

அரைக்க :

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பூண்டு – 4 பல்

சிகப்பு மிளகாய் – 2

தாளிக்க :

சமையல் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

எள்ளு – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – ஒரு சிறிய குச்சி

பெருங்காயத்தூள் – ஒரு சிறிய சிட்டிகை
பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
செய்முறை :
உருளைக்கிழங்கு சட்னி செய்வது எப்படி?
வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்து கலவை, மிளகாய் தூள் போட்டு 3 நிமிடம் வதக்கிய பின்னர் உருளைக் கிழங்கு, உப்பை போட்டு வதக்கவும்.

பின்னர் அதில் தண்ணீர் அரை கப் ஊற்றி மிதமான தீயில் கடாயை மூடி வைத்து வேக வைக்கவும். நன்றாக வெந்த தண்ணீர் நன்றாக வற்றி மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எள்ளு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து உருளைக் கிழங்கு கலவையில் கொட்டி கிளறவும். 

சுவையான உருளைக் கிழங்கு சட்னி ரெடி. இது சப்பாத்தி, பூரி, தோசை, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)