குறிப்பாக பச்சை மாங்காயை ஜூஸாக எடுத்துக் கொள்ளும்போது அதிகப்படியான உடல் வெப்பத்தை சமநிலைப் படுத்தும். அம்மா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும் என்று ஒரு பழமொழி உண்டு.
அதற்கு ஏற்ப குழந்தைகளும் கூட மாங்காயில் உப்பு தடவி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டும் தன்மை இந்த மாங்காய்க்கு உண்டு.
மாம்பழத்தை காட்டிலும் பச்சை மாங்காயில் கலோரி அளவுகள் மிக மிக குறைவு. நார்ச்சத்துக்கள் அதிகம்.
பச்சை மாங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலின் பிஎம்ஐ அளவு குறைவாக இருப்பதும் இடுப்பு சுற்றளவும் குறைவது சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அதனால் உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் தங்களுடைய சாலட் போன்றவற்றில் பச்சை மாங்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை மாங்காயில் அதிக அளவில் பாலிபினால்களும் தனித்துவமான மாங்கிஃபெரின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்திருக்கின்றன.
மாங்கிஃபெரின் உயிரணு பெருக்கத்தை அதிகரிக்கச் செய்வதோடு அப்போப்டொசிஸை என்னும் செல் இறப்பு செயல்பாடுகளைத் தடுக்கவும் உதவுகிறது.
தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப்,
முற்றிய கிளிமூக்கு மாங்காய் - ஒன்று,
வறுத்த வேர்க் கடலை - 3 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கொத்த மல்லித் தழை - 6 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை . :
பாசுமதி அரிசியுடன் உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவி, கொட்டையை நீக்கி தோலுடன் சிறிய சிறிய துண்டுக ளாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை நறுக்கி மாங்காயுடன் சேர்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, மல்லித் தழையை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் (நீர் விட வேண்டாம். நைஸாகவும் அரைக்கக் கூடாது).
வாணலியில் எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், வறுத்த வேர்க்கடலை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.