அருமையான மூங்க்லெட் ரெசிபி செய்வது எப்படி?





அருமையான மூங்க்லெட் ரெசிபி செய்வது எப்படி?

0
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. 
மூங்க்லெட் ரெசிபி செய்வது எப்படி?
புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். 
ஜீரண மண்டலத்தை வலிமையாக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. 

இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

கோடை காலத்தில் இதை உட்கொண்டால், இது வயிற்றில் உள்ள சூட்டை நீக்க உதவுகிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. 

உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்ட சத்துக்களை அள்ளித் தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

200 கிராம் பாசிபருப்பு ஊற வைத்து தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

சுவைக்க உப்பு

4 பச்சை மிளகாய்

பேக்கிங் சோடா

1/2 தேக்கரண்டி எண்ணெய்

1 பெரிய வெங்காயம்

1 தக்காளி

1 குடைமிளகாய்

2 மேஜைக் கரண்டி கொத்த மல்லி இலை

எப்படி செய்வது 

பாசிபருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிய விட்டு 150 மில்லி தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். அரைத்து வைத்த மாவை அதில் ஊற்றி தோசை போல் சுடவும்.

அதன் மேல் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கொத்த மல்லி ஆகிய வற்றை பொடியாக நறுக்கி தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும். 
இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நான்கு நிமிடங்கள் வரை வேக விடவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். ஆரோக்கி யமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)