காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
இதயத்தை பாதிகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காலான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.
பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.
குறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
தேவையானவை :
பாஸ்தா – 150 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு – 5-6 பற்கள்
மொசரெல்லா சீஸ் – ¼ கப் (Mozzarella cheese)
கோதுமை / மைதா – 2 மேஜைக் கரண்டி
பால் – 1 கப்
காய்ந்த துளசி – 1 தேக்கரண்டி
காளான் – 200 கிராம்
காய்ந்த ஆர்கனோ – 1 தேக்கரண்டி
நல்ல மிளகு தூள் – தேவையான அளவு
பட்டர் – 2 மேஜைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !
செய்முறை :
முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும
ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 7-9 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.
ஒரு சாஸ் பானில் பட்டரை விட்டு சூடாக்கவும்.வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
திருஷ்டி கழிக்கும் கல் உப்பு அறிவியல் உண்மை !
கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.
பின்பு வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். காளான் பாஸ்தா ரெசிபி ரெடி! பரிமாறவும்