கிராமங்கள் வழியே பயணம் செய்யும் போது இந்த பனங்கிழங்கை காணாமல் கடக்க முடியாது. குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தான் பனங்கிழங்கு சீசன்.
இந்த பனங்கிழங்குகள் வெறும் சுவையை மட்டும் தருவதல்ல.. எண்ணற்ற நன்மைகளையும் உள்ளடக்கி யுள்ளன. பனங்கிழங்கு நார்ச்சத்துக்கு மூல ஆதாரமாக உள்ளது.
காலிபிளவவர் ரோஸ்ட் செய்வது எப்படி?
குடல் அழற்சி, வயிற்று மந்தம், மலச்சிக்கல், செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பனங்கிழங்கு சிறந்தத உணவு. தசை வளர்ச்சிக்கும், வலு பெறுவதற்கும் பனங்கிழங்கு மிகவும் நல்லது.
எலும்புகளின் உறுதி தன்மைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் பனங்கிழங்கில் தக்க பலன்கள் கிடைக்கின்றன.
இதனால் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள், எலும்புப்புரை, எலும்பு மஜ்ஜை, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
தேவையானவை:
பனங்கிழங்கு – 4,
ஜவ்வரிசி விழுது- 2 கப் (ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்),
சர்க்கரை – 3 கப்,
ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,
முந்திரி, பாதாம், உலர்திராட்சை, நெய் – தேவையான அளவு.
செய்முறை:
பனங்கிழங்கை வேக வைத்து துண்டுக ளாக்கி, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பிறகு, கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி, பனங்கிழங்கு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் ஜவ்வரிசி விழுது சேர்த்துக் கலந்து, சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். தேவையான நெய் ஊற்றி மேலும் கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இண்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது.
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி... இதயத்துக்கு நல்லது... ஆய்வில் தகவல் !
அந்த வகையில் பனங்கிழங்கில் குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் மெதுவாக செரிமானம் செய்து குளுக்கோஸ் அளவையும் மெதுவாகவே உயர்த்துகிறது.
எனவே தான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.