புரோட்டீன் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. இது நமது உடலின் செயல்பாடுகள் பல நடைபெறுவதற்கு காரணமாக அமைகிறது.
ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையில் அதிக அளவு புரோட்டீன் சத்து காணப்படுவதால் வெஜிடேரியன் மற்றும் வெஜன் உணவுகளை சாப்பிடுபவர்களின் புரத தேவையை இது பூர்த்தி செய்கிறது.
ஒரு கப் வேர்க்கடலையில் 7 முதல் 9 கிராம் புரோட்டீன் காணப்படுகிறது. இது தோராயமாக ஒரு முட்டையில் காணப்படும் புரோட்டீனின் அளவு.
ஆரோக்கியமான கொழுப்புகள் வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிவோம். எனினும் இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள்.
வேர்க்கடலையில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகிறது. உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும் அதே நேரத்தில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளில் அத்தியாவசியமான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருப்பதால் இது மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பதோடு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைக்கிறது.
வேர்க்கடலையில் உணவு நார்ச்சத்து எக்கச்சக்கமாக காணப்படுகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பதற்கு தேவையான உணவு நார்ச்சத்து வேர்க்கடலையில் போதுமான அளவு இருக்கிறது.
இது சீரான மல இயக்கங்களுக்கு உதவுவதன் மூலமாக மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கிறது. மேலும் வயிறு நிரம்பிய உணர்வை தருவதன் மூலமாக உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது.
வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான தின்பண்டமாகவும் அமைகிறது.
என்னது காதல் மனைவி எனக்கு தங்கையா? மரபணுவால் அதிர்ச்சி !
தேவையானவை :
வேர்க்கடலை - ஒரு கப்
பாஸ்தா - ஒரு பாக்கெட்
தக்காளி துண்டுகள், வெங்காய துண்டுகள் - தலா கால் கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் 5 முதல் 8 நிமிடம் வேக விடவும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி குழாயின் அடியில் பிடித்து குளிர்ந்த நீரில் அலசி, சிறிது நேரம் ஆற விடவும். பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவை யிலிருந்து சிறிது எடுத்து ஒவ்வொரு பாஸ்தாவிலும் அடைத்து கொள்ளவும
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கி, பாஸ்தாக் களை சேர்த்து, உப்பு, கரம் மசாலாத்தூள் போட்டு,- 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்.
ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !
சுவையான வேர்க்கடலை மசாலா பாஸ்தா தயார்.