பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.
பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்து விட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
வெள்ளைப் பூசணியானது கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்தும் ஆன்டி-ஆஞ்சியோஜெனிக் (Anti-angiogenic) பண்புகளைக் கொண்டுள்ளது.
வெள்ளைப் பூசணி சாறு புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. எனவே, உங்கள் வழக்கமான உணவில் வெள்ளை பூசணி சேர்த்துக் கொள்வது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.
சுவையான அன்னாசிப்பழ ஜாம் செய்வது எப்படி? #pineapplejam
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 150 கிராம்
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
அச்சு வெல்லம் – சிறிதலவு
உப்பு – தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் – 4 மேஜைக் கரண்டி
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது)
தாளிக்க :
எண்ணெய் – 3 மேஜைக் கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
பூசணிக் காயை சிறிய துண்டுக ளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்த வற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிற மானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டு களை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், அச்சு வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.
அருமையான கிரீமி தக்காளி சூப் செய்வது எப்படி?
பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கொதி வந்து கூட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பூசனிக்காய் கூட்டு தயார்