ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் செய்வது எப்படி?





ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் செய்வது எப்படி?

0
கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. அது மட்டும் அல்ல. 
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் செய்வது எப்படி?
சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. 

அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். 

இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இயல்பாக சிக்கன் பெண் குழந்தைகளுக்கு அவ்வளவு நல்லது அல்ல என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு. 

இது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடு மற்றும் ஆண்களின் சிறந்த மற்றும் தரமான விந்து உற்பத்திக்கு உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். 
அந்த வகையில், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் தினசரி போதுமான அளவு சிக்கன் எடுத்துக் கொள்வது நல்லது.

என்னென்ன தேவை?

சிக்கன் ஸ்டாக் செய்ய...

சிக்கன் - 1/2 கிலோ,

வெங்காயம், கேரட் - தலா 1,

செலரி - 2, பூண்டு - 4 பல்,

முழு மிளகு - 1 டீஸ்பூன்,

உப்பு - 1/2 டீஸ்பூன்,

தண்ணீர் - 2 லிட்டர்.

சூப் செய்ய...

ஸ்வீட்கார்ன் - 1½ கப்,

வெண்ணெய் - 1 டீஸ்பூன்,

ஸ்பிரிங் ஆனியன் - 3 டீஸ்பூன்,

கார்ன்ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கு,

முட்டை - 1.

எப்படிச் செய்வது?
ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் செய்வது
மிளகு, பூண்டை இடித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் செய்ய கொடுத்த பொருட்களை போட்டு 1 மணி நேரம் வேக வைக்கவும். 

பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும். சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட் கார்ன் மற்றும்

3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப் சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கரைத்த கார்ன் ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். 

கடைசியாக அடித்த முட்டையை கொதிக்கும் சூப்பில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)