காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன. கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப் படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.
ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. இதயத்தை பாதிகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப் பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காலான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
தேவையான பொருட்கள் :
மக்ரோனி - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்
பூண்டு பற்கள் - 5
வெங்காயம் - 1
தக்காளி - 2
காளான் - 10
பசலைக்கீரை - 1 கட்டு
டையட் மயோனிஸ் - 5 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தக்காளி குருமா செய்வது எப்படி?
செய்முறை
பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை நன்றாக கழுவி பெரிய துண்டுக ளாக வெட்டிக் கொள்ளவும். பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்த வுடன் அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும். 5 நிமிடங்கள் வேக விடவும்.
அவ்வப்போது அடியில் மக்ரோனி தாங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120 மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். இதனை பிறகு பயன்படுத்த வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும்.
மூளையை பாதிக்கும் விஷயம் !
1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இப்போது கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா தயார்.