ருசியான வெஜிடபிள் ஆம்லெட் செய்வது எப்படி?





ருசியான வெஜிடபிள் ஆம்லெட் செய்வது எப்படி?

0
பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு முட்டை. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த அசைவ உணவு பல்வேறு ரெசிப்பிகள் தயாரிப்பதற்கு உதவுகிறது. 
வெஜிடபிள் ஆம்லெட் செய்வது
அப்படியான ஒரு ரெசிபி தான் ஆம்லெட். ஒரு சிலருக்கு ஆம்லெட் மட்டும் கொடுத்தால் போதும் வெறும் தயிர் சாதம் இருந்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு ஆம்லெட் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். 

ஆம்லெட் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இது ஆரோக்கியமான ஒரு உணவாகவும் கருதப்படுகிறது. முட்டையில் நமது உடல் ஆரோக்கியத்திற்காக அத்தியாவசியமான ஒன்பது அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. 
அது மட்டுமல்லாமல் முட்டை புரோட்டீனின் சிறந்த ஆதாரமாக அமைகிறது. இதன் காரணமாக இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

இது தவிர கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் அதிக அளவில் காணப்படுகிறது. 

முட்டைகளில் காணப்படும் வைட்டமின் B1 நமது நரம்புகளை பாதுகாப்பதற்கு உதவி புரிகிறது. மேலும் இந்த ஊட்டச்சத்து குளுக்கோஸின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.

முட்டையில் ஏராளமாக பொதிந்து கிடக்கும் இரும்புச்சத்து ஆரோக்கியமான அதேசமயம் தொடர்ச்சியான ஆக்சிஜன் சப்ளை உடல் உறுப்புகள் அனைத்திற்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது.
தேவையானவை:

கடலைப் பருப்பு – 50 கிராம், 

துவரம் பருப்பு – 50 கிராம், 

பாசிப் பருப்பு – 50 கிராம், 

உளுந்து, முந்திரி, 

மக்காச்சோளம் – 50 கிராம், 

முழு கோதுமை – 50 கிராம்,

பச்சை மிளகாய் – 2,

பெரிய வெங்காயம் – 1,

கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.
கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி !
செய்முறை:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச் சோளம், கோதுமை ஆகிய வற்றைத் தனித்தனி யாக வறுத்து, ரவை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். 

இதனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச் சோளம், முழு கோதுமை போன்ற வற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது.

பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன் றவற்றில் இருந்து நுண் ஊட்டச் சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)