கோதுமை ரவை புலாவ் செய்வது எப்படி?





கோதுமை ரவை புலாவ் செய்வது எப்படி?

0
தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களின் வணிகங்களைவிட அதிகம் செய்யப்படுவது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாக இருக்கும். 
கோதுமை ரவை புலாவ் செய்வது எப்படி?
இது நல்லதொரு உணவு மட்டுமல்ல, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் வாய்ந்தது என்றால் மிகையாகாது. உடல் பருமன் என்பது இன்றைக்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. 

ஏதேதோ மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலன் கிடைக்காமல், பலரும் இயற்கை மருத்துவத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு கோதுமையும் கைகொடுக்கும். 
குறிப்பாக, கோதுமை ரவை நல்ல மருந்து. அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. மேலும், குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. 

இதனால் கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

இது, நமது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெள்ள மெள்ளக் கரைவதால், எடையைக் குறைக்க உதவும். அத்துடன் ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவும்.

கோதுமை ரவையில் கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால், புளித்த ஏப்பம்  போன்ற பிரச்னைகளுக்கு உடனடி நிவாரணம் பெற்றுத்தரும். மேலும் அஜீரணம், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும். 

கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும்; ஆண்மை அதிகரிக்கும். 

அக்கிப்புண், தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணிவதோடு பிரச்னையின் தீவிரமும் குறையும்.
ஆம்னி பேருந்தை ஸ்கெட்ச் போட்டு திருடிய ஓனர்கள் - சிக்க வைத்த செல்போன் !
தேவையானவை:

கோதுமை ரவை - ஒரு கப்,

பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

ஊற வைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,

நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க:

சோம்பு, கசகசா (இரண்டும் சேர்ந்து) - ஒரு டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்,

தக்காளி - ஒன்று.

செய்முறை:
கோதுமை ரவை புலாவ் செய்வது

அரைக்கக் கொடுத்துள்ள வற்றை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கி... கோதுமை ரவையையும் அதனுடன் சேர்த்து வதக்கி, இறுதியில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

இதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து, நன்றாகக் கலக்கி குக்கரை மூடி விடவும். 
பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?
ஆவி வந்ததும் குக்கரைத் திறந்து பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி, 'வெயிட்’ போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். மல்லித்தழை தூவி அலங்கரிக் கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)