பெரியவர்களுக்கு பார்லி - வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?





பெரியவர்களுக்கு பார்லி - வெஜிடபிள் சூப் செய்வது எப்படி?

0
நாளுக்கு நாள் இந்தியாவில் டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
பார்லி - வெஜிடபிள் சூப் செய்வது
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவு, பானங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நீரிழிவு நோயாளியாக வாழ்வது எளிதான விஷயம் இல்லை என்றாலும், அவ்வுளவு சிரமமான காரியம் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இதுவொரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். 

பார்லி நீர் இயற்கையாகவே நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. இதில் நம் உடலுக்கு தேவையான பல நண்மைகள் உள்ளன. 

மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. சரி இனி பார்லி பயன்படுத்தி பெரியவர்களுக்கு டேஸ்டியான பார்லி - வெஜிடபிள் சூப் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள்

பார்லி - அரை கப்,

கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி - ஒரு கப்,

வெங்காயத் தாள் - ஒரு கைப்பிடி அளவு,

புதினா, கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு,

மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,

உப்பு - தேவையான அளவு,

எலுமிச்சைப்பழம் - அரை மூடி
செய்முறை :

கொத்தமல்லி,  புதினா, வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்கறி களை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்.

குக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத் தாள், புதினா, கொத்த மல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில் விட்டு இறக்கவும்.
ஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும். சூப்பரான பார்லி - வெஜிடபிள் சூப் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)