அருமையான பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி?





அருமையான பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி?

0
காய்ச்சல், மலச்சிக்கல், செரிமான நோய்கள், ரத்த குறைபாடு என பலவற்றிற்கு பீட்ரூட் சிறந்த ஊட்டமாக இருக்கிறது. பழங்கால ரோம பேரரசுகள் ஆட்சியில் இருந்த போது இது பாலுணர்வை தூண்டும் உணவாக பார்க்கப்பட்டது என்பது ஆச்சரியதக்க செய்தியாக உள்ளது. 
அருமையான பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
மேலும், இதை ரத்தத்திற்கு இணையானதாக கருதி இருக்கிறார்கள். இன்னொரு விஷயம் என்ன வென்றால், ஆப்ரிக்கா பகுதிகளில் எய்ட்ஸ் நோய் இரண்டாம் நிலை சிகிச்சைக்காகவும் இது பயன்படுத்தப் பட்டுள்ளது. 

உங்களுக்கு சிறுநீரக கல் அல்லது சிறுநீரக கல் வளர்வதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டால், ஆக்ஸலேட் அதிகமாக இருக்கும் பீட்ரூட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
இருப்பினும், அத்தகையவர்கள் பீட்ரூட்டை சமைத்து பின்னர் அதை சிறிய அளவில் உட்கொள்ளலாம். அதன் அதிக நைட்ரேட் தாது காரணமாக, பீட்ரூட் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. 

எனவே, குறைந்த ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பீட்ரூட் உண்ணும் போது ஒவ்வாமை ஏற்படும் நிலையில், உங்கள் உடல் ஆக்சலேட்டுகளுக்கு கட்டுப்படவில்லை என்று அர்த்தம். 

எனவே, இதை உண்பதை தவிர்த்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பீட்ரூட்டை பச்சையாக உண்பதை தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 

அரைத்த பீட்ரூட் அல்லது துருவிய பீட்ரூட்டை கோதுமை மாவில் கலக்கி இட்லி அல்லது தோசை செய்து சாப்பிடலாம். இதை வைத்து நீங்கள் சுவையான பீட்ரூட் ஹல்வாவையும் செய்து சுவைக்கலாம்.
தேவையானவை:

பீட்ரூட் – கால் கிலோ,

சர்க்கரை – சுவைக்கேற்ப,

முந்திரிப் பருப்பு – 8,

திராட்சை – 12,

ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்,

கார்ன் ஃப்ளார் – 1 டீஸ்பூன்,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
பீட்ரூட்டை தோல்நீக்கி துருவிக் கொள்ளுங்கள். நெய்யைக் காய வைத்து, முந்திரி, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலை சேர்த்து பத்து நிமிடம் வதக்குங்கள். வதக்கிய பின், இறக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். 

அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேருங்கள்.
நன்கு கொதித்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். ஐந்து நிமிடம் கொதித்ததும், ஏலத்தூள் சேர்த்து இறக்குங்கள். விருந்துகளில் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத்தரும் இந்த பச்சடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)