பிரட் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது, இது செரிமானத்தின் போது ஆற்றலை கொடுக்கிறது. பிரட்டில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன.
ஆனால் ஊட்டச் சத்துக்கள் மிக மிகக் குறைவாக உள்ளது. வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது நல்லது கிடையாது இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
வெறும் வயிற்றில் ரொட்டி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? என்ற கேள்வியை நாம் கேட்பதே இல்லை. நாமாகவே அது ஆரோக்கியமானது தான் என்று நம்பிக் கொள்கிறோம்.
இது பசியை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம்: நீங்கள் சாப்பிடும் ரொட்டி வகையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். பிரட்டில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம். குறிப்பாக வெள்ளை பிரட்டில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகம்.
காலை வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடும் போது, குறிப்பாக ஒயிட் பிரட் காலையில் எடுத்துக் கொள்ளும் போது அது அசாதாரணமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் பிரெட், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம். இந்த பிரட் கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது.
அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் பிரட் கேக்கை செய்யலாம்.
தேவையானவை:
பிரெட் - 6 துண்டுகள்,
நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம்,
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தலா 10,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
நெய் - 100 கிராம்.,
சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும்.
சர்க்கரையை, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும்.
பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.