பிரவுன் பிரட் என்பது பொதுவாக முழு கோதுமை மாவுடன் தயாரிக்கப்படும் ஒருவகை ரொட்டி ஆகும். முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த பிரவுன் பிரட் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
இது சாதாரண பிரெட்டை விட இது ஆரோக்கியமானது. முழு கோதுமை பிரெட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
ஓட்ஸ் ஆரோக்கியமான தானியமாகக் கருதப்படுகிறது, அதிலிருந்து பிரெட் தயாரிக்கப் பட்டால், பல ஊட்டச் சத்துக்களை நாம் பெறலாம். பிரவுன் பிரட்டில் உள்ள நார்ச்சத்து, வேகமாக செரிமானம் ஆகும் தன்மை உள்ளது.
இதனால் மலச்சிக்கலைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. பிரவுன் ரொட்டியில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வை ஊக்குவிக்கிறது. எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு, ஃபைபர் குளுக்கோஸின் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பிரட்டில் வெண்ணெய் அல்லது ஜாம் சேர்த்து சாப்பிடலாம். முட்டை, கோழி அல்லது பருப்பு வகைகள் போன்றவற்றுடன் எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்படும் காய்கறிகள் வைத்து உண்ணலாம். வெண்ணெய்ப் பழமான அவகேடோ உடன் உள்ள சேர்த்து சாப்பிடலாம்.
சரி இனி பிரட் பயன்படுத்தி சத்துக்கள் நிறைந்த பிரட் பக்கோடா செய்வது ! என்று இந்த பதிவில் கண்போம்.
அசத்தலான சீஸ் பிரெட் போண்டா செய்வது எப்படி?
தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஊறுகாய் – 15 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
பிரட் – 10
கொத்த மல்லித் தழை – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தை நன்கு கழுகி எடுத்துக் கொள்ளவும். அந்த பாத்திரத்தில் சிறிது தண்ணீர் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஊறுகாய், வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
இதில் பிரட் துண்டுகளை முக்கி சூடான எண்ணையில் பொரித்தெடுத்து, கொத்த மல்லி தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.