கபாப்களுக்கென்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் அதன் பாரம்பரியத்தையும், அதன் மீது உள்ள ஈர்ப்பையும் நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.
ஆண்டு தோறும் ஜூலை 14 அன்று இந்த கபாப் தினம் கொண்டாடப் படுகிறது. முகலாய உணவான இதற்கு இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில் தான் ரசிகர்கள் அதிகம்.
அதற்கு காரணம் இந்த உணவின், இறைச்சியும், மசாலாவும் சேரும் அந்த சூட்சுமம் தான். நமது தேசத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை நினைவு கூறவும், கபாப்களை சுவைப்பதற்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
பலர் இந்த நாளில் ருசியான கபாப்களை வீட்டிலேயே செய்து உண்டு இந்த நாளை கொண்டாடுவார்கள். ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. அதுமட்டும் அல்ல,
சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேவையான பொருட்கள் :
சிக்கன் லெக் பீஸ் - அரை கிலோ
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக் கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
ஃபிரஷ் கிரீம் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
சிக்கன் லெக் பீஸை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பௌலில் தயிர் எடுத்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகிய வற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் தொட்டு எடுத்து 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வலுவான எலும்புகளுக்கு! இதெல்லாம் க்காம சாப்பிடுங்க !
அருமையான கால்மி கபாப் ரெடி.
புதினா சட்னி, வெங்காயம் ஆகிய வற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.