சுவையான காலிபிளவர் பரோட்டா செய்வது எப்படி?





சுவையான காலிபிளவர் பரோட்டா செய்வது எப்படி?

0
காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது.
சுவையான காலிபிளவர் பரோட்டா செய்வது எப்படி
விலை அதிகமாக இருந்தாலும் விரும்பி வாங்கிச் சாப்பிடும் காய்கறிகள் பட்டியலில் இவை முக்கியப் பங்கை வகிக்கின்றன.

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. 

காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. 
புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. 

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. சரி இனி காலிபிளவர் கொண்டு சுவையான காலிபிளவர் பரோட்டா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

காலிஃப்ளவர் துருவியது - 1 கப்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,

கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,

ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?
சுவையான காலிபிளவர் பரோட்டா செய்வது எப்படி
பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். 

மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலி ஃப்ளவர், அனைத்து மசாலாத் தூள்கள், உப்பு, கொத்த மல்லித் தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டி நடுவில் பூரணத்தை வைத்து மூடி 

மீண்டும் திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)