தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் கருவின் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.
கொத்தவரங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதயத்திற்கு நல்ல பலத்தை அளிக்கிறது. ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் ஆற்றல் கொத்தவரங்காய்க்கு உண்டு.
கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. சரியாக ஜீரணமாகா விட்டால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படலாம்.
அதற்கு கொத்தவரங்காய் சமைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும்.
கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் இது இதயத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியதாம்.
சரி இனி சுவையான கொத்தவரங்காய் பச்சடி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை:
துவரம் பருப்பு – அரை கப்,
கொத்தவரங் காய் – 100 கிராம்,
பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வையுங்கள். கொத்தவரங் காய், வெங்காயம், தக்காளி ஆகிய வற்றை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங் காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங் காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து எல்லா வற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்… ‘கொத்தவரங் காயில் இப்படி ஒரு பச்சடியா?’ என்று வியப்பீர்கள்.