கோலா உருண்டை பிரியாணி செய்வது எப்படி?





கோலா உருண்டை பிரியாணி செய்வது எப்படி?

0
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம்.
கோலா உருண்டை பிரியாணி செய்வது எப்படி?
அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். 
தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக் கீரை - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 3 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

கோலா உருண்டை செய்ய:

கடலைப் பருப்பு - ஒரு கப்,

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3,

பெருங்காயத் தூள் - சிட்டிகை,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்),

கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு. 

செய்முறை:
கோலா உருண்டை பிரியாணி செய்வது
கோலா உருண்டை செய்யக் கொடுத்துள்ள வற்றை (வெங்கா யம், கொத்த மல்லி, உப்பு நீங்கலாக) அரை மணி நேரம் ஊற வைத்து, கொர கொரப்பாக அரைக்கவும்.

இத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டவும். 

வாணலியில் எண் ணெயைக் காய வைத்து, உருண்டை களைப் பொரித்து எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். 

குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, நறுக்கிய தக்காளி, 
அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கஸ¨ரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். 

ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா உருண்டை களைச் சேர்த்துக் கலந்து விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)