ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.
ஜவ்வரிசி குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை விரைவாக ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடலின் சுவற்றில் வழவழப்புத் தன்மையை உண்டாக்குகிறது.
இதனால் அல்சர் குணமாகிறது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசி தான்.
உடலை குளிர்ச்சி அடைய வைப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.
எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.
தேவையான பொருள்:
ஜவ்வரிசி - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் வரை
உருளைக் கிழங்கு (நடுத்தர அளவு) - 4
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ற வாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?
செய்முறை:
ஜவ்வரிசியை, வெது வெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உருளைக் கிழங்கை, வேக வைத்து, தோலுரித்து, ந்ன்றாக மசித்துக் கொள்ளவும்.
ஊறிய ஜவ்வரிசியை, நீரை ஒட்ட வடித்து விட்டு, உருளைக் கிழங்கோடு சேர்க்கவும். அத்துடன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், தனியாத் தூள், உப்பு சேர்க்கவும்.
(காரமான போண்டா வேண்டு மென்றால், 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூளையும் சேர்க்கவும்). எல்லா வற்றையும் நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
ஸ்மைலிங் டிப்ரஷன் என்றால் என்ன?
பின்னர் அதில் சிறிது சிறிதாகக் கடலை மாவைத் தூவிப் பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையைக் காய வைத்து, 4 அல்லது 5 உருண்டை களாகப் போட்டு, பொன்னிற மாகப் பொரித்தெடுக் கவும்.
தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப்புடன் பரிமாறவும்.