சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal





சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி? #Tuvaiyal

0
நவீன காலங்களில், உட்கார்ந்த நிலையில் பணிபுரிவது பெரும்பாலான இடங்களில் வழக்கமாகி விட்டது. அதிகப் படியாக உட்கார்ந்திருப்பதால் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. 
இஞ்சி துவையல் செய்வது
நமது அன்றாட வழக்கத்தை மதிப்பாய்வு செய்து உணவு மற்றும் உடற்பயிற்சியைச் செய்வது முக்கியம். ஆரோக்கிய சமூகத்தில் ஒப்புதல் பெற்ற காலை உணவு, இஞ்சி சாறு ஆகும். 

இஞ்சி ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் எடை இழப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது. 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பது செரிமானத்தை எளிதாக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் எடை இழப்பிற்கும் உதவுகிறது. 

அதே போல், இஞ்சி குமட்டலை சரி செய்வது, ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துவது, மூளைக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இஞ்சி, இரைப்பைக் குழாயின் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. 

செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்க உதவுகிறது. உணவை வயிற்றில் நீண்ட நேரம் இருக்க விடாது. இஞ்சி உட்கொள்வது நொதித்தல் மற்றும் மலச்சிக்கலை மேலும் குறைக்கும். 
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
தேவையான பொருட்கள்

இஞ்சி – சிறிய துண்டு

தேங்காய் துருவல் – அரை கப்

காய்ந்த மிளகாய் – 3

புளி – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக் கரண்டி

கடுகு – கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை


இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சி ஆகிய வற்றை சேர்த்து வறுக்கவும். 

இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், 
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து வதக்கினால் சுவையான இஞ்சி துவையல் தயார். 

 * இதை மூன்று, நாட்களுக்கு வைத்திருந்து பயன் படுத்தலாம்

Post a Comment

0Comments

Post a Comment (0)