சூப்பரான மரக்கறி பாஸ்தா செய்வது எப்படி? #Pasta





சூப்பரான மரக்கறி பாஸ்தா செய்வது எப்படி? #Pasta

0
உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாஸ்தா விரும்பி சாப்பிடப்படுகிறது. அதற்கு இதன் சுவையும், எளிமையான செய்முறையுமே காரணம். ஆனால் பாஸ்தா சாப்பிடுவதை சிலர் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள். 
சூப்பரான மரக்கறி பாஸ்தா செய்வது எப்படி?
இது மோசமான கார்போஹைடரேட் நிறைந்த உணவு என்பதால் பாஸ்தாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. பாஸ்தா உணவிற்கு கார்போ ஹைடரேட்டோடு தொடர்பு இருப்பதால் பலரும் இதை சாப்பிட தயங்குகிறார்கள். 
ஆனால் சரிவிகித உணவில் பாஸ்தாவை சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என உலகமே ஒத்துக் கொண்டுள்ளது. 

பாஸ்தாவை அளவாக உட்கொண்டால், கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை குறைவாகவே எடுத்துக் கொள்வோம். இதனால் தேவையின்றி உடல் எடை அதிகரிப்பது ஒழுங்குப் படுத்தப்படும். 

பாஸ்தா உணவு ஆரோக்கியமற்றது என்று சொல்லப்பட்டு வரும் பொய்யை உடைக்க வேண்டிய நேரமிது.பாஸ்தா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதிலுள்ள ஊட்டச்சத்துகள் குறித்து நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். 

பாரம்பரியமான பாஸ்தா, மைதா மாவில் தயாரிக்கப் படுகிறது. இதில் கார்போ ஹைடரேட்டும் புரதமும் சேர்ந்தே இருக்கின்றன. எனினும் இன்று கடைகளில் முழு கோதுமை பாஸ்தா முதல் சுண்டல் பாஸ்தா வரை பல வகைகளில் கிடைக்கிறது. 
இதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளது. சுவை மற்றும் வடிவத்தை வைத்தே ஒருவர் பாஸ்தாவை தேர்ந்தெடுத்த போதும், நம்முன் இவ்வுளவு வகையான பாஸ்தாக்கள் இருக்கும் போது நமக்கான பாஸ்தாவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
பார்க்கின்சன் நோயை வெல்ல என்ன செய்வது?
தேவையானவை :

பாஸ்தா - அரை கிலோ

குடை மிளகாய் - மூன்றிலும் பாதியளவு (சிவப்பு, மஞ்சள், பச்சை)

காரட் - ஒன்று

பச்சை பட்டாணி (புரோசன்) - அரை டம்ளர்

சோளம் (புரோசன்) - அரை டம்ளர்

ஸ்பிரவுட்ஸ் - 10

செத்தல் மிளகாய் - 4

பெரிய வெங்காயம் - ஒன்று

உள்ளி, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ் - 2 மேசைக் கரண்டி

ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு மேசைக் கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - வதக்க
நிலவேம்புக் குடிநீர் எப்போது குடிக்க வேண்டும்?
செய்முறை :
மரக்கறி பாஸ்தா செய்வது
முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்ரா மூழ்கக் கூடிய அளவிற்கு தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள், கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்ராவை போட்டு ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் அல்லது மாஜரீன் போடவும். 

பாஸ்ரா அவிந்ததும் (8-10 நிமிடங்கள்) வடித்து, பின் குளிர்நீர் விட்டு வடித்து, ஒரு தட்டில் பரவி வையுங்கள். மரக்கறி களை ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பிட்டு வையுங்கள். 

பச்சை பட்டாணி, சோளம் இரண்டையும் குளிர் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி, விதைகளை வெளியே கொட்டி விடவும். 

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதங்கியதும், உள்ளி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறி, மரக்கறி களை கொட்டி பிரட்டி, 2 நிமிடங்களுக்கு மூடி விடவும். பின்னர் சோளம், பட்டாணி சேர்க்கவும். மெதுவாக பிரட்டி விடவும். 
காரட் அவிந்த பதம் வந்ததும், பாஸ்ராவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிரட்டவும். இப்போ சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, உப்பைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். குக்கரால் இறக்கி ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்து விடுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)