அருமையான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?





அருமையான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

0
சளி, இருமல் வந்து விட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டு விடலாம். தண்ணீரை சூடாக்கித் தான் குடிக்க வேண்டும்.  
அருமையான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?
வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட  வீக்கத்தைக் குறைக்கும்.  

தொண்டை உறுத்தலை நீக்கும். சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். 

பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். 

சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

துண்டு மீன் – அரை கிலோ

வெங்காயம் – 2௦௦ கிராம்

பச்சை மிளகாய் – நான்கு

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஐந்து

கொத்த மல்லி இலை – ஒரு கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்த மல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)