உணவே மருந்து என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதிலும், நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் தான் நமது உடல் இயக்கத்திற்கும் நலத்திற்கும் அடிப்படையானது.
அந்த வகையில், கிழங்கு வகைகளில் கருணை கிழங்கு முக்கியமானது. உருளைக்கிழங்கு அதிகம் பயன்படுத்தப் பட்டாலும், அதில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்டது.
கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.
இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுபவை. கருணைக்கிழகில் இரு வகைகள் உண்டு.
காரும் கருணை, காராக் கருணை என்று அழைக்கப்படும் இந்த கிழங்கு வகைகல் இரண்டுமே, சமைத்து உண்ண ஏற்றவை.
பிடிகருணை என்று அழைக்கப்படும் காரும் கருணை ஒரு வகை என்றால், காராக் கருணை வகையைச் சேர்ந்தது சேனைக்கிழங்கு. கருணைக்கிழங்கை சரியான பக்குவத்தில் சமைக்காவிட்டால், உண்ணும் போது நாக்கில் அரிப்பு ஏற்படும்.
எனவே சமைக்கும் பொழுது கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். பின்பு அதன் தோலை உரித்து, சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்குவதுடன் சாப்பிடும் பொழுது ஏற்படும் அரிப்பும் இருக்காது.
அரிசி கழுவிய நீரில் வேக வைத்தால் காரல், நமைச்சல் மட்டுப்படும் என்றும் சொல்வார்கள். கருணைக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்தினால், வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக சாப்பிடத் தோன்றும்.
தேவையானவை:
கருணைக்கிழங்கு – 200 கிராம்,
கேரட் – 50 கிராம்,
பெரிய வெங்காயம் – 2,
பூண்டு – 3 பல்,
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
அரைத்துக் கொள்ள:
துருவிய தேங்காய் – 6 டீஸ்பூன்,
சிறிய தக் காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று,
சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன்,
முந்திரி – 4.
செய்முறை:
கருணை கிழங்கைத் தோல் சீவி, சுத்தம் செய்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கேரட் டையும் அதே போல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.
கேரட் டையும் அதே போல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும்.
அரைக்கக் கொடுத் துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி…
உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு காய்கள் குழைந்து விடாமல் வேக வைக்கவும்.
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
வெந்து கொண்டிருக்கும் கலவையில், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
விருப்பப் பட்டால், கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்க லாம்.
குறிப்பு: மூலநோய் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.