நிறைய பேர் ஆட்டுக்கறி/மட்டன் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நினைத்து, மட்டன் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் மட்டனை உணவில் சேர்ப்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண முடியும்.
இது தவிர மட்டனில் ஜிங்க், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், போன்றவையும் உள்ளன.
முக்கியமாக மற்ற அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு. எனவே ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடா விட்டாலும், வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியம் என்று வரும் போது அதில் பாலியல் ஆரோக்கியமும் அடங்கும். ஒருவரது பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆட்டிறைச்சி பெரிதும் உதவி புரிகிறது.
ஆட்டிறைச்சி புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருள் மட்டுமல்ல. ஆட்டிறைச்சி மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது.
ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் அதிகம் மற்றும் இதில் ஒள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
ஆய்வுகளிலும் மட்டன் கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பளித்து, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 300 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மல்லி, புதினா - சிறிது
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?
செய்முறை :
எல்லாம் நறுக்கி தயார் செய்து வைக்கவும். தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடலை பருப்பை ஊற வைத்து குக்கரில் 2 -3 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடலை பருப்பை ஊற வைத்து குக்கரில் 2 -3 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா வதக்கி,
தக்காளி, மல்லி புதினா, மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு போட்டு பிரட்டவும், தக்காளி மசிய வேண்டும்.
தக்காளி, மல்லி புதினா, மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு போட்டு பிரட்டவும், தக்காளி மசிய வேண்டும்.
தக்காளி மசிந்ததும் மிள்காய்த் தூள், கறி மசாலாத் தூள் சேர்க்கவும், பின்பு நன்கு கழுவி நீர் வடிகட்டிய மட்டன் கீமாவை போட்டு பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதி வரவும் மூடி 4 - 5 விசில் வைத்து இறக்கவும்.
வேக வைத்த கடலை பருப்பு சேர்க்கவும் பிரட்டவும், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும், எல்லாம் சேர்ந்து கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.
இப்பொழுது சுவையான மட்டன் கீமா தயார், மல்லி இலை தூவி பரிமாறவும்.
இதனை ரசம் சாதம், சப்பாத்தி, பூரியுடனும் சாப்பிடலாம்.
பெரிய சோம்பேறி யார்? தெரியுமா?
குறிப்பு :
அவரவர் தேவைக்கு கீமா கெட்டியாக வேண்டுமானால், தேங்காய் உடன் தண்ணீர் குறைவாக சேர்க்க வேண்டும்,
கொஞ்சம் கிரேவி மாதிரி வேண்டு மானால் ஒரு கப் தண்ணீர் அரைத்த தேங்காய் விழுதுடன் சேர்த்து கீமா சன்னாதாலை கொதிக்க வைத்தால் ரெடி.