விஷமாக மாறும் உணவு எப்படி தெரியுமா?





விஷமாக மாறும் உணவு எப்படி தெரியுமா?

0
இன்றைய ஆரோக்கியமற்ற உணவுப் பழகத்தால் எந்த உணவையும் சற்று அதிகமாக உண்டு விட்டால் மறுநாளே வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி என கடுமையான பின்விளைவு களை சந்திக்க வேண்டி யிருக்கின்றன. 
விஷமாக மாறும் உணவு
இப்படி நாம் உண்ணக் கூடிய உணவே ஆபத்தாக மாறும் நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையிலும் அவசியம்.

காரணம் என்ன ?

உணவு விஷமாக மாறுவது என்பது நாம் உண்ணும் உணவுகள் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் நச்சுகள் மூலமாகப் நமக்கு பரவுகின்றன. 

இவை நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், அருந்தும் தண்ணீர், சமைக்கும் தண்ணீர், நன்குக் காய்ச்சாத பால் ஆகிய வற்றின் மூலமாகப் பரவும்.

எவ்வாறு பரவுகிறது?

நோரோ வைரஸ் எனப்படும் வைரஸானது சமைக்காத காய்கறிகள், பழங்களில் இருக்கக் கூடியவை. 

அதே போல் அருந்தும் நீரிலும் இந்த வைரஸ் இருக்கும். சமைப்பவரு க்கும் இந்த நோரோ வைரஸ் இருந்தால் அது சமைக்கும் உணவில் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

அடுத்ததாக சால்மொனெல்லா என்னும் பாக்டீரியாவானது இறைச்சி களிலும், முட்டை போன்ற வற்றின் மூலம் பரவக் கூடியது. 
எவ்வாறு பரவுகிறது?
அது மட்டுமன்றி இவை வீட்டில் வளர்க்கக் கூடிய செல்லப் பிராணிகள் மூலமாகவும் எளிதில் பரவும்.

சில சமையம் அடிக்கடிக் கழுவாத உங்கள் கைகள் மூலமாகவும் பரவும்.

இவை தவிர கெட்டுப் போகாமல் இருக்க உணவை ஃபிரிஜ்ஜில் வைக்கும் பழக்கத்தை பெருபாலோர் பின்பற்று கின்றனர். 

இப்படி நீண்ட நாட்கள் வைக்கும் உணவுகளில் பேத்தோஜீனிக் மற்றும் ஸ்பாய்லேஜ் என்னும் பாக்டீரியா உருவாகிறது. 

 பேதோஜீனிக் பாக்டீரியா உணவின் சுவை, வாசனை மற்றும் நிறத்தை மாற்றாது. ஆனால் அதனால் பக்கவிளைவுகள் வரலாம்.

ஸ்பாய்லேஜ் பாக்டீரியா உணவின் சுவை, நிறம், வாசனையை மாற்றக் கூடியது. இப்படி உணவில் எதை உணர்ந்தாலும் அந்த உணவைத் தவிர்த்து விடுவது நல்லது.

இவற்றை தடுக்கும் வழிகள் என்ன?

காய்கறிகள் பழங்களை நன்குக் கழுவியப் பின்னர் பயன்படுத்துங்கள். காய்கறி, பழங்களை நறுக்கும் கத்தி, அரிவாள் மனை, அரியும் பலகை, சமையல் மேடை மற்றும் ஸ்டவ், சிங்க் தொட்டி போன்ற வற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தடுக்கும் வழிகள் என்ன?
பயன்படுத்திய பாத்திரங்களை ஒரு நாளைக்கு மேல் சிங்க் தொட்டியில் போட்டு வைக்காதீர்கள்.

மீறும் உணவுகள் மற்றும் உணவுக் கழிவுகளை அவ்வப்போதே குப்பைத் தொட்டியில் போடவும்.

இறைச்சிக்குப் பயன்படுத்திய கத்தியை அப்படியே காய்கறி பழங்களுக்குப் பயன் படுத்தாதீர்கள்.

 ஃபிரிஜ்ஜில் வைக்கும் உணவு களை ஒரு நாளைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். 

முடிந்த அளவு ஃபிரிஜ்ஜில் வைப்பதைத் தவிர்க்கலாம். நாள் தவறிய ( expiry date ) உணவுப் பொருட்கள், பதப்படுத்தப் பட்ட உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும். 

 கைகளை நன்குக் கழுவிய பின் சமையல் செய்யவும். இறைச்சி களை நன்கு சுத்தம் செய்து , வேக வைத்து உண்ணவும். பாலை நன்குக் காய்ச்சிய பின் குடிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)