சிறுதானியங்களை நோக்கி, சமூகம் திரும்பி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக சத்துக்களை கொண்டது குதிரைவாலி.
கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கிறது என்றால் பாருங்களேன்.
குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.
உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.
குதிரைவாலியை ஆதிகால மக்களே, பயன்படுத்தி யிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்தது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்த குதிரைவாலி தானியத்தை பயன்படுத்தலாம்.
காரணம், மிகக்குறைந்த அளவே கலோரிகள் இதில் உள்ளன. அதாவது, 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால், 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம்.
இதில் கிட்டத்தட்ட 65 கலோரிகள் வரை கிடைக்கும் என்கிறார்கள். அது மட்டுமல்ல, இதில் நார்ச்சத்துக்களும் அதிகம்.. 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது.
இதனால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது. உடல் பலம் பெற கம்பு ஒரு சிறந்த உணவாகும், எனவே உடல் வலிமையுடைய அதிகளவு இந்த கம்பங்கூழ் சாப்பிடலாம்.
இதுவரை கம்பங்கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம், இதை தொடர்ந்து குதிரைவாலி கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி – 50 கிராம்,
கேழ்வரகு மாவு – 200 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,
தயிர் – 1/2 கப்,
தண்ணீர் – தேவையான அளவு
செய்வது எப்படி?
முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடி வைக்கவும். நன்றாகப் புளித்து விடும்.
ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊற வைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும் பொழுது இறக்கவும். பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.
கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள் !குதிரைவாலி கூழ் பயன்கள்
குதிரை வாலியில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ள தால் எலும்பு களுக்கு நல்ல வலிமை தரும். மேலும் இவற்றுள் இரும்புசத்து நிறைந்துள்ள தால் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது.
குதிரை வாலியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது. பெண்கள், இதய நோயாளிகள் இந்த குதிரைவாலி கூழ் அதிகளவு உண்டு வர உடலுக்கு மிகவும் நல்லது.