அருமையான கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி?





அருமையான கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி?

0
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், உணவே மருந்து என்ற காலங்கள் எல்லாம் மாறி தற்போது இப்போது மருந்தே உணவு என்ற அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 
கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது
ஏனென்றால் நாம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் இப்போது உள்ள உணவு முறை மாறி இல்லாமல்  கம்பு, கேழ்வரகு,  தினை மற்றும் மக்காசோளம் என இவற்றை தான் அதிகமாக உணவாக எடுத்து வந்தார்கள். 
அரிசி மற்றும் கோதுமை என இவற்றை எல்லாம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு என்பது மிகவும் குறைவாக தான் இருந்தது. அப்படி பார்த்தால் நாம் நன்மை என்று எடுத்துக் கொள்ளும் உணவில் கூட சிறிதளவு தீமை இருந்து கொண்டு தான் உள்ளது.

ஆனால் அத்தகைய தீமையினை நாம் பெரும்பாலும் கவனிப்பது கிடையாது. இவ்வாறு கவனிக்காமல் விடுவதன் மூலமாக நம்முடைய ஏற்படும் பக்க விளைவுகளையும் கவனிக்க முடியாமல் போகும் நிலை ஆனது ஏற்பட்டு விடும். 
நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் கம்பில் நார்ச்சத்து ஆனது நிறைந்து இருக்கிறது. ஆகையால் இவற்றை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக செரிமான பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனை என இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

கம்பு பல நன்மைகளை கொண்டிருந்தாலும் கூட இதில் ஆக்சலேட்டு எனப்படும்  பொருள் காணப்படுவதினால் இதனை நாம் அளவுக்கு அதிகமாக உணவாக உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

சுவையான பாதாம் பிஸ்தா அல்வா செய்வது எப்படி?

இதுவும் கம்பின் தீமைகளில் ஒன்று ஆகும். அளவுக்கு அதிகமாக கம்பை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் வரலாம்.

தேவையான பொருள்கள் :

கம்பு மாவு - 1 கப்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

முட்டை கோஸ் - 100 கிராம்

கேரட் - 2

உருளைக்கிழங்கு - 1

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பால் - அரை கப்

செய்முறை :
முட்டைகோஸ், கேரட், உருளைக் கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி களாக தேய்த்து வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள். ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)