பலரது வீட்டில் வீட்டை சுற்றி பல மூலிகை செடிகளை தங்களது தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர்.
இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப் படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா காசநோயாக கூட மாற நேரிடும்.
இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
சரி இனி
கற்பூரவல்லி இலை பயன்படுத்தி டேஸ்டியான கற்பூரவல்லி சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். தேவையானவை :
கற்பூரவல்லி இலைகள் – 15,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
புளி – கோலி குண்டு அளவு,
பெருங்காயம் – சிட்டிகை,
கடுகு, உளுந்தம் பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – அரை டீஸ்பூன்.
கற்பூரவல்லி சட்னி,
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
செய்முறை :
கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனி யாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.
அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.