குடைமிளகாய் புதினா புலாவ் செய்வது எப்படி?





குடைமிளகாய் புதினா புலாவ் செய்வது எப்படி?

0
ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் உண்டாகின்றன.
குடைமிளகாய் புதினா புலாவ் செய்வது எப்படி?
புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக் கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில்  தெரிய வந்திருக்கிறது. 
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. 

புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும். புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும். 

புதினாவை அரைத்து முகத்தில் பூசி  வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. 
புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. 

புதினா தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
பாதரசம் எந்தெந்த மீன்களில் அதிகளவு இருக்கிறது தெரியுமா?
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,

குடைமிளகாய் - 2,

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,

புதினா, கொத்த மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

பட்டை - சிறு துண்டு,

பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு, 

நெய் - தேவையான அளவு, 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குடைமிளகாய் புதினா புலாவ்
வெங்காயம், தக்காளியை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். சூப்பரான குடை மிளகாய் புதினா புலாவ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)