வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடேபிள் என்று அழைக்கிறோம். நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம்.
ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும்.
காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது. ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள்.
அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். காய்கறிகளில் பல வகைகள் உண்டு. அவைகள் விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள், வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள், இலை வகை காய்கறிகள் மற்றும் பூக்கள் வகை காய்கறிகள்.
ஒவ்வொன்றிலும் பல பயன்களும் அடங்கியுள்ளது. வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.
அவைகளில் கேரட், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு. இவைகளில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து வளமையாக இருக்கும்.
இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !
தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 5 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 2 சிட்டிகை
காய்கறி மசாலா செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2 கப்
பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் - 3கப்
(காலிப்ளவர், உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட்)
உரித்த பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 கப்
நசுக்கிய பச்சை மிளகாய் - 11/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்த மல்லித்தழை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
லெமன் - 1
செய்முறை :
நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
அதில் மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். பெரிய அடுப்பில் சிறிது நேரம் நன்கு வதக்கவும். ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்று சேர்ந்து வரும் போது உப்பு, நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்யவும். சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சோடா, மிளகாய்த் தூள் தண்ணீர் சேர்த்து கலந்து கொஞ்சம் சொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மாவைத் தயாரிக்கவும்.
செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தேய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
சூடான வெஜிடபிள் போண்டா தயார்.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.