யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப் படுகிறது.
ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது. யோகர்ட் என்பது புளிப்பான ஒரு பதார்த்தமாகும்.
பதப்படுத்தப்பட்ட பாலில் உயிருள்ள பாக்டீரியாக்களை (Live bacteria) சேர்த்து, பல மணி நேரம் வைக்கப்படுவதன் மூலம் யோகர்ட் தயாராகிறது.
இந்த பாக்டீரியாக்கள் பாலிலுள்ள சர்க்கரை என்ற லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக(Lactic Acid) மாற்றி பாலை திரவப் பொருளாக மாற்றுகிறது. இதனால் இதற்கு ஒரு வித்தியாசமான ருசி கிடைக்கிறது.
இதில் புரதச்சத்து அதிகமுள்ளதால் உடல் பருமனைக் குறைத்து தசைகளை சீர்படுத்துகிறது. கல்சியம் அதிகமுள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
குடல்நாள நுண்ணுயிரிகள் (Gut Microflora) இருப்பதால் குடலிலுள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று குடல்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
தேவையானவை:
கோதுமை மாவு – 1 கப்
பாலிஷ் செய்யாத சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
யோகர்ட் – ½ கப்
முட்டை – 1
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பவுலில் மாவு, சர்க்கரை, யோகர்ட், முட்டை சேர்த்து நன்கு கலக்கவும். சூடான தவாவில் வெண்ணெய் தடவி, பான்கேக்கு களாக ஊற்றவும்.
பான்கேக்கு களை இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சூப்பரான யோகர்ட் பான்கேக் தயார்.