பலவகை தானியங்களுடன் ஒரு சில பருப்பு வகைகள் மற்றும் கொட்டை யுணவுகளைச் சேர்த்து அரைக்கும் மாவையே சத்துமாவு என்று கூறுகிறோம்.
லைசின் என்ற முக்கியமான புரதம் குறைபாடாகவும், மெத்தியோனைன் என்னும் புரதம் அதிகமாகவும் இருக்கும் தானியங்களுடன், லைசின் அதிகமாகவும்,
மெத்தியோனைன் குறைவாகவும் இருக்கும் பருப்பு வகைகள் சேர்க்கப்படும் போது, உடலுக்குச் சேரும் புரதத்தின் தரம் உயர்வாக இருப்பதுடன், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள் என்று அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கின்றன.
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது சத்து மாவிப்பின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.
சத்து மாவு என்பது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கரும்பு சாறு போன்றதொரு பானமாகும். இதன் விளைவாக, நேச்சுரல் சுகர் படிப்படியாக வெளியிடப்படும்.
தினமும் சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சத்து மாவு, பாசிப் பருப்பை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு – 1 கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
சின்ன வெங்காயம் – கால் கப்,
பூண்டு – 4 பல்,
கொத்துமல்லித் தழை – சிறிதளவு,
தேங்காய் – 1 பத்தை,
மிளகு – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
சின்ன வெங்காயம், தேங்காய், கொத்த மல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, கொர கொரப்பாக அரைக்கவும்.
ஒரு பாத்திர த்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன், சத்து மாவையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தேங்காய், கொத்து மல்லி, மிளகு, சீரகத் தூள் எல்லா வற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான சத்துமாவு பாசிப் பருப்பு அடை ரெடி. அடைக்குத் தொட்டுக் கொள்ள, காரச் சட்னி அருமையாக இருக்கும்.