பழங்காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப் படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும்.
பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது .பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது.
இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது.
அதனால் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது கூடுதலான உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற முடியும். மோசமான செரிமான மண்டலத்தையும் சரி செய்து ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும். பட்டர் டீ குடிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு எந்தவித கெடுதலும் ஏற்படாது.
ஏனெனில் இதில் அதிகப்படியான லினோலிக் அமிலம் இருக்கிறது. இது கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.
பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன் படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம்.
உங்களுக்கு இந்த வாரம் வித்தியாச மான சிக்கன் ரெசிபியை சமைக்க ஆசை இருந்தால், கசகசா பட்டர் சிக்கன் சமைத்துப் பாருங்கள்.
இங்கு அந்த கசகசா பட்டர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
கசகசா – 150 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
வெண்ணெய் – 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கசகசா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, அதோடு உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் பொடி செய்து வைத்துள்ள கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, குறைவான தீயில் மீண்டும் மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி,
எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி பரிமாறினால், கசகசா பட்டர் சிக்கன் ரெடி!