கொத்தமல்லி டீ தயார் செய்வது எப்படி?





கொத்தமல்லி டீ தயார் செய்வது எப்படி?

0
கொத்தமல்லி அல்லது தனியா இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இந்த மசாலாப்பொருள் இல்லாமல் எந்த சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. 
கொத்தமல்லி டீ தயார் செய்வது
இது ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு உணவையும் மகிழ்விக்கும். மேலும், இது சுவை அளிப்பதோடு, மருத்துவ குணங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களில், ஆயுஷ் அமைச்சகம் கொத்தமல்லியை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. 

கொத்த மல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தலைமுடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். நெஞ்செரிச்சல், வயிற்று கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல் போன்ற பல நோய்களுக்கு அருமருந்து கொத்த மல்லி டீ. அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதை -10 கிராம்,

சீரகம்-2 கிராம்,

சுக்கு (தோல் சீவியது) – 2 கிராம்,

பனங்கற்கண்டு – தேவையான அளவு,

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,

ஏலம் – 1 சிட்டிகை

செய்முறை :
கொத்தமல்லி, சீரகம், சுக்கு ஆகிய மூன்றையும் மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து (பாலின் அளவை பொறுத்து அதிகரிக்கலாம்) ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 

1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள், ஏலம் சேர்த்து தினமும் இரு வேளை குடித்து வருவது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)