கீரைகள் தான் இருக்கிறதிலயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்று கூறலாம். விலை மலிவாக கிடைப்பதோடு ஊட்டச்சத்துக்கள், சுவை என ஒட்டு மொத்த நலன்களையும் கொடுக்கக் கூடியது.
கீரைகளில் அதிக போலிக் அமிலம் காணப்படுகிறது. இது நம்முடைய நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், உணவில் புரதச்சத்தை கூட்டி உடல் வளர்ச்சி அடையவும் உதவுகிறது.
கண் பார்வை, தோல் பராமரிப்பு, இரும்புச் சத்து குறைபாடு போன்ற பல விஷயங்களை களைய கீரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். பாலக்கீரை இந்திய உணவுகளில் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது.
பருப்புகள் மற்றும் பயிறு வகைகளுடன் கீரையை கடைந்து நீங்கள் சாப்பிட்டு வரலாம். இது உங்களுக்கு சுவையானதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவி செய்யும்.
பயிறு வகைகளை பயன்படுத்துவது உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவும். துத்தநாகம், இரும்பு மற்றும் லிம்போசைட்டு சத்துகளுடன் உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தொற்று நோய்களை எதிர்த்து போரிட உதவுகிறது. கீரை சூப் போட்டு கூட நீங்கள் குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி - அரை கப்,
உளுந்து - கால் கப்,
வெங்காயம் - 1
தக்காளி - 1,
முட்டைகோஸ் - ஒரு கப்,
பாலக்கீரை - ஒரு கப்,
புரோக்கோலி - ஒரு கப்,
புதினா இலைகள் - சிறிதளவு,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.
இந்த ரவை யுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆறியதும் நன்கு மிளகுத் தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப் ரெடி.