பொழுதைப் போக்க வேண்டு மென்றால் வறுத்த வேர்க்கடலையை வாங்கி மென்றுக் கொண்டிருந்தாலே போதும் நேரம் போவதே தெரியாது என்பார்கள்.
பொழுது போக்கு இடமான பீச், பார்க் போன்ற இடங்களிலும் கட்டாயம் வேர்கடலை தள்ளு வண்டிகளை தவிர்க்க முடியாது.
இப்படி ’பெஸ்ட் படி’ யாக இருக்கும் வேர்க்கடலையை மின்னும் விளக்குகள், குளுகுளு ஏசியில் அமர்ந்து வேர்க்கடலையோடு... சூடாக காஃபியும் குடித்தால் எப்படி இருக்கும்...?
அப்படியான அனுபவத்தை தான் அளிக்கிறது ’புட் கடலை கஃபே’. இந்த கஃபேயில் எல்லாமே வேர்கடலை மட்டும் தான்.
அதாவது நீங்கள் எந்த ஸ்னாக்ஸ் கேட்டாலும் அது வேர்கடலை யில் தயாரிக்கப்பட்ட தாகதான் இருக்கும். மசாலா வேர்க்கடலை, உப்பு வேர்கடலை என்பதோடு சாண்ட்விச், பர்கரிலும் பீனட்ஸ் தடவி..
வேர்கடலை களை தூவி அளிக்கின்றனர். பயன்படுத்தும் எண்ணெயும் கடலை எண்ணெய் தான். கோயம்புத்தூரில் நிஷா மற்றும் ஹரீஷ் தம்பதி இந்த கஃபேவை முதல் முறையாக துவங்கி யுள்ளனர்.
அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால் சென்னை யிலும் இரண்டாவது கிளையைத் துவங்கி யுள்ளனர். வேளச்சேரி ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலின் உணவு விடுதியில் இந்த கஃபே வை பிக்பாஸ் புகழ் தர்ஷன் திறந்து வைத்தார்.
வேர்க்கடலை யில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் முக்கியத் துவத்தை இந்த தலைமுறை க்கும் கொண்டு செல்லவே இந்த கஃபேவை உருவாக்கி யுள்ளதக தெரிவிக்கின்றனர்.