கீரையில் உள்ள ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தருகிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் மேம்படுத்தப் படுகிறது.
வைட்டமின் K மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாக திகழக்கூடிய கீரை நமது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறது. குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
ஏன் என்ற காரணம் எல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் கீரையை உணவாக சாப்பிடுவது. மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்து தான் சாப்பிட்டிருப்போம். கீரைகள் எப்போதும் சத்து நிறைந்தவை.
மூலிகை தாவரங்களாக இருந்தாலும் அவையும் கீரையில் தான் சேர்ப்பார்கள் நம் முன்னோர்கள். கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.
இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன.
கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
இந்த கீரையை இட்லி அரிசியுடன் சேர்த்து உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - அரை கப்
தேங்காய் துருவல் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம் - கால் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
மோர் மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லி அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் போன்ற வற்றை மிக்சியில் கொட்டி லேசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
இட்லி ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்த பின்னர் அதில் உதிர்த்த இட்லி கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான கீரை உப்புமா ரெடி.