பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாகச் செயல்படும்.
அதுவும் உருளைக்கிழங்கின் தோலில் அளவுக்கு அதிகமானப் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் என்ன செய்வோம்? அதனை நீக்கி விட்டு தான் சமைப்போம்.
ஆனால் இந்தத் தோல்கள் தான் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதே போல் உருளைக்கிழங்கு புண்களையும் ஆற்றும். அதாவது வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும்.
மேலும் இதனால் அசுத்தநீர் தங்காமல் வெளியேறி விடுகிறது. உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட சிலர் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒரு ஆய்வில் கண்டறியபட்டது. நீங்கள் உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொண்டால், கவனமாக இருங்கள், ஏனென்றால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
உருளைக்கிழங்கில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்கச் செய்யும், எனவே கீல்வாத நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக் கூடாது.
நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். அதாவது, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நீங்கள் உருளைக் கிழங்கிலிருந்து விலகி இருந்தால் நல்லது.
உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள். அதாவது, பிபி நோயாளிகள் உருளைக்கிழங்கை அதிகம் உட்கொள்ளக் கூடாது.
உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு கலோரிகளை அதிகரிக்கும், இது உடல் பருமனை ஏற்படுத்தும்.
தேவையானவை :
உருளை - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியதாக நறுக்கியது
கத்திரிக்காய் - 1/4 கிலோ
இஞ்சி- பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
தனியா பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி - தலா 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
கொத்தமல்லி - 1/2 கப் நறுக்கியது
செய்முறை :
முதலில் உருளை, கத்திரி மற்றும் தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை 1 நிமிடத்திற்கு வதக்க வேண்டும்.
பின் அதனுடன் இஞ்சி-பூண்டு, சீரகதூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு வதக்கவும்.
பின்னர் உருளை, கத்திரி சேர்த்து 13-15 நிமிடம் வரை கிளறவும். தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் மல்லி தூவி, பூரி, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பறிமாறவும்.