உலக அளவில் அனைவராலும் ரசித்து ருசித்து சாப்பிடப்படும் விளைவு மலிவான ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான்.
இது ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் என்பது பலருக்கும் தெரியும்.
அதே போல வாழைக்காயையும் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிறந்த பலன் தருகிறது. வாழைக்காயில் செரிமானத்தை ஊக்குவிக்க கூடிய பொருட்கள் காணப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய நோய்க்கு எதிராக செயல்படும் பண்புகளும் இருக்கிறது.
வாழைக்காயில் காணப்படும் பிரீ பையாடிக் விளைவு குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல வாழைக்காயில் காணப்படுகிறது.
வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்குகளை போல வாழைக்காயிலும் ஏராளமான பொட்டாசியம் சத்து உள்ளது.
இந்த பொட்டாசியம் சத்தானது இயற்கை வாசோடைலேட்டராக செயல்பட்டு தசைகளின் சுருக்கத்திற்கும், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது.
வாழைக்காயில் பொதிந்துள்ள மாவுச்சத்து ஆரோக்கியமான சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது.
இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
பச்சை மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சைப் பட்டாணி - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாழைக் காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டை யாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டை களைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!