செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி?





செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி?

0
காளான் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு சிறந்த உணவுப் பொருள்.. எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருப்பது போல இதிலும் உள்ளது. நல்ல காளான் பொதுவாக தூய்மையான இடத்தில் தான் வளரும். 
செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி?
அத்தோடு நச்சு காளானும் கூடவே வளரும்.. நல்ல காளானை கண்டு பிடிக்க இலகுவான வழி பொதுவாக கெட்ட காளான் ஒவ்வொன்றும் வெவ்வேறு மணத்தை கொண்டு இருக்கும்.

ஆனால் நல்ல காளான் அனைத்தும் ஒரே மணத்தை தன் கொண்டு இருக்கும். அதை வைத்து இலகுவாக அடையாளம் காண முடியும்.
காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், உறுதியாக இருக்கும் காளான்களை தேர்ந்தெடுங்கள். காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும். 

நீங்கள் அவற்றை வாங்கும் போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். காளான்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு மேல் சேமிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிய காளான்களை ஒரு ஜிப்-லாக் பேக் அல்லது குளிர்சாதன பெட்டியில் காகித பையில் வைக்கலாம். நீங்கள் வாங்கிய காளான்களை முதலில் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அவற்றை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

சரி இனி காளான் பயன்படுத்தி டேஸ்டியான செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள் :

காளான் – அரை கப்

எண்ணெய் – இரண்டு தேகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

சின்ன வெங்காயம் – கால் கப் (நறுக்கியது)

தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

கறிவேப்பில்லை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

சீரக தூள் – அரை டீஸ்பூன்

சோம்பு தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – அரை டீஸ்பூன்

கொத்த மல்லி – சிறிதளவு
குளிர் இரத்தப் பிராணி, வெப்ப இரத்தப் பிராணி என்றால் என்ன?
செய்முறை
செட்டிநாடு காளான் மசாலா செய்வது
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகிய வற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும். 

பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகிய வற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். ...
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)