சூப்பரான நண்டு தக்காளி குழம்பு செய்வது எப்படி? #Crab





சூப்பரான நண்டு தக்காளி குழம்பு செய்வது எப்படி? #Crab

0
நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 
நண்டு தக்காளி குழம்பு செய்வது
செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. 

கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்குவாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது. 
உங்கள் சுவையை தூண்டும் நண்டு தக்காளி குழம்பு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நண்டு தக்காளி குழம்பு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க !

தேவையானவை 

உப்பு - தேவையான அளவு

தக்காளிப்பழம் - 1/4 கிலோ

புளி - 30 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

வெள்ளைப் பூண்டு - 25 கிராம்

டால்டா - 100 மி.லி.

நண்டு - 1/2 கிலோ

செய்முறை :
நண்டைச் சுத்தப்படுத்தி நன்றாக அலசிக் கொள்ளவும். 100 கிராம் வெங்காயத்தை மட்டும் தனியே எடுத்துத் தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

இப்போது வெள்ளைப் பூண்டை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதியை மட்டும் எடுத்து தோல் உரித்து

அம்மியில் வெங்காய த்தையும், பூண்டையும் வைத்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி அதில் புளியைப் போடவும்.

சிறிது நேரம் வைத்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இந்த சாற்றை நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். புளித்தண்ணீரை அரைத்த பூண்டு, வெங்காயம் விழுதுடன் கலந்து கொள்ளவும்.

இப்போது மீதியுள்ள 50 கிராம் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக அரிந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் டால்டாவை ஊற்றி அடுப்பில் ஏற்றவும்.
கடலில் குதித்து நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க வீரர் !
டால்டா காய்ந்து புகை வரும் வேளையில் மீதியுள்ள பூண்டை உரித்து நீளவாக்கில் அரிந்து வெங்காயத்துடன் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

வதங்கியதும் சுத்தம் செய்யப்பட்ட நண்டு, மிளகாய்ப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி ஆகிய பொருட்களைப் அதில் சேர்த்து கிளரவும். 

ஒரு நிமிடம் கழித்து அதில் அரை லிட்டர் நீரை ஊற்றவும். பின்னர் தட்டு வைத்து மூடி அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
நன்றாகக் கொதிக்க விட்டு, நண்டு நன்றாக வெந்த பிறகு புளிச் சாற்றுக் கலவையை இதனுடன் சேர்க்கவும்.இது கொதி வந்து பத்து நிமிடம் ஆனவுடன் பொடியாக நறுக்கப்பட்ட தக்காளிப் பழத்தை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

.குழம்பு கொதித்த வாசனை வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ருசி அதிகமாக இருக்க வேண்டு மென்றால் இதனுடன் 100 மி.லி. அளவு கெட்டியான தேங்காய்ப் பாலை எடுத்துச் சேர்க்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)