கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப் படுத்துவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது.
கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.
வேக வைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம்.
நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.
தேவையானவை :
புளிக்காத புது தயிர் – 1 கப்,
சிறிய கத்தரிக்காய் – 4,
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 2 பல்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க :
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
குடல் புழுவை வெங்காயத்தை வைத்து எப்படி வெளியேற்றலாம்?
செய்முறை :
கத்தரிக்காயை நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டை தோலுரித்து நசுக்கி வையுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து நறுக்கிய கத்தரிக்காய் துண்டு களை சிறிது சிறிதாகப் போட்டு, நன்கு வேக விட்டெடுங்கள். ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை எடுத்து விடுங்கள்.
பரிமாறும் பொழுது பொரித்த கத்தரிக்காய், அரைத்த விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகிய வற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து, கடுகை தாளித்துக் கொட்டுங்கள்.
வித்தியாசமான ருசியுடன் இருக்கும் இந்த தயிர்பச்சடி.