ஆட்டிறைச்சியை பொறுத்தவரை, அதன் ஒவ்வொரு உறுப்புகளும், நம்முடைய உடலுக்கு மிகுந்த நன்மையை தரக்கூடியது. அதனால் தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது.
அந்த வகையில், மட்டன் கொழுப்புகளில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக் கறியை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.
ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒரு முறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.
உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும். பார்வை கோளாறுகள் நீங்கும். ஆட்டுக் கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.
ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய பார்வையை கூர்மைப் படுத்தக் கூடியது. கபம், சளி, இருமல், நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.
அதனால் தான், பலவீன மானமாவர்கள் நெஞ்செலும்பாக சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக் கூடியது.
தேவையானவை
மட்டன் - கால் கிலோ
வேக வைத்த சோளம் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக் கரண்டி
பூண்டு - 2 பல்
டவுன்டா இலை - இரண்டு
பார்ஸ்லே கீரை (அ) மல்லி தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட்டை நறுக்கி வைக்கவும். பிரசர் குக்கரில் மட்டனை கழுவி சுத்தம் செய்து போட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேக விடவும்.
பின் ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெங்காயம், டவுன்டா இலை போட்டு வதக்கி நறுக்கிய பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், பார்ஸ்லே கீரை, சோம்பு தூள், கரம் மசாலா தூள் போட்டு தாளித்து மட்டன் சூப்பில் ஊற்றவும்.