ஆளி விதை கலந்த நீர், ஓம வாட்டர், லெமன்-தேன் கலந்த பானம் போன்றவை பல காலமாக உடல் எடை குறைப்பிற்காகவும் உடல் ஆரோக்கி யத்திற்காகவும் பெரும்பாலான மக்களால் பருகப்பட்டு வருகின்றன.
வழக்கமாக இதை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக வெண்டைக்காய் நீரும் சேர்ந்துள்ளது.
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் ஒருபக்கம் நடந்து வந்த போதிலும், இதிலுள்ள ஊட்டசத்துகள் காரணமாக நம்முடைய டயட்டில் இதையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
குறைவான கலோரி கொண்ட வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மாக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகியவை நிறைந்துள்ளது.
வெண்டைக்கய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம் நீர்த்த வடிவத்தில் இந்த சத்துகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கின்றன. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை பருகுவதன் மூலம், இது மலமிளக்கியாக செயல்பட்டு சீரான இடைவெளியில் மலம் கழிவதற்கு வழிவகை செய்கிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வெண்டைக்காய் உதவியாக இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
வெண்டைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
தேவையானவை:
கிட்னி கல் என்றால் என்ன? உருவாக காரணம் என்ன?
புளிக்காத புது தயிர் – 1 கப்,
வெண்டைக்காய் – 100 கிராம்,
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள்.
தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள்.
பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர் பச்சடி இது.